Total Pageviews

Followers

Tuesday, September 28, 2010

ஆரோக்கியம் ஆனந்தம்

        ஆரோக்கியம் ஆனந்தம்

                  இந்த கட்டுரையை படிப்பவர்கள், ஆர்வமுள்ளவர்கள் இந்த செய்தியினை வருங்கால சமுதாயம் வளமாக அமைய
(1) மற்றவர்களுக்கு கூறவும்
(2) தங்களுக்கு தெரிந்த மொழியில் மொழிபெயர்க்கவும்
(3) பழமரங்கள் நட்டு வளர்க்கவும்
(4)தங்கள் வாழ்க்கையில் நடைமுறைபடுத்தவும் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

    இது ஜாதி, மத, இன, மொழி, நிற, தேச பேதமற்றது. இது உலகளாவியது.

        பொருளடக்கம்

(1)இயற்கை உணவும் எனது அனுபவமும்
(2)இயற்கை உணவு என்றால் என்ன?
(3)மனிதன் சைவமா?
(4)மனிதன் ஒரு பழந்தின்னி (Frugivorous)
(5)பால் மற்றும் முட்டை & சைவமா, அசைவமா?
(6)விலங்கின புரதம் குறித்த உண்மைகள்
(7)இயற்கை உணவு உண்டால் நடப்பது என்ன?
(8)கழிவுகளின் நீக்கம் எவ்வாறு நடக்கும்?
(9)கழிவுகள் நீங்கும் போது செய்ய வேண்டியது என்ன?
(10)சிகிச்சையின் போது நினைவில் கொள்ளவேண்டியவை
(11)பொதுவாக நினைவில் கொள்ள வேண்டியவை
(12)சைவ, அசைவ மற்றும் இயற்கை உணவிற்குள்ள வித்தியாசங்கள்
(13)இயற்கை உணவும் சுவாசமும்
(14)இயற்கை உணவு உண்ண ஆரம்பிப்பது எப்படி?
(15)இயற்கை உணவு எவ்வாறு உண்ணவேண்டும்?
(16)கேள்விகள் பல & பதில் ஒன்று
(17)யோகா, ஜிம்னாஸ்டிக்ஸ், உடற்பயிற்சிகள் & சில உண்மைகள்
(18)பயனுள்ள புத்தகங்களின் பட்டியல்
(19)இயற்கை சிகிச்சை முறைகள்
(20) ஸ்பேஸ் லா (வெளி விதி)
(21)சமையலுணவில் தவிர்க்கவேண்டியவை
(22)ஜுஸ் பாஸ்டிங் (சாறு உண்ணா நோன்பு)
(23)இரத்தமும் இயற்கை உணவும்
(24)அக்குபிரசர் (ஒருவரின் குணத்தை மாற்றுவது எப்படி?)
(25)உண்ணா நோன்பு
(26)ஜீரண சக்தியை அதிகரிக்க
(27)சிறுநீரக நோயாளிகள் தண்ணிர் குடிக்கலாமா?
(28)எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும்?
(29)இயற்கை உணவிற்கு மாற மனக்கட்டுப்பாடு பெறுவது எப்படி?
(30)மனரீதியாக தயாராதல்
(31)சிரிப்பும் ஆரோக்கியமும்
(32)இயற்கை உணவு குறித்த பொன்மொழிகள்
(33)இயற்கை குளிர் சாதனப்பெட்டி
(34)ஏ.சி & வரமா, சாபமா?
(35)இயற்கை உணவினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
(36)சில இயற்கை உணவு குறிப்புகள்
(37)இயற்கை உணவு & சுருக்கமாக
(38)இயற்கை உணவு & உலகப்பிரச்னைகள் அனைத்திற்கும் ஒரே தீர்வு
(39)பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்
(40)இக்கட்டுரையை வாசித்தவர்களுக்கு
(41)மனிதன் & பிரபஞ்சத்தின் மிகச் சிறந்த கோமாளி


        இயற்கை உணவும் எனது அனுபவமும்

    எனது பெயர் இரதி லோகநாதன். என் வயது 33. நான் இந்தியாவில் வாழ்ந்து வருகிறேன். எனக்கு திருமணம் ஆகி இரண்டு  பெண் குழந்தைகள் 10 மற்றும் 5 வயதில் உள்ளார்கள். நான் அசைவம், பால் மற்றும் பால் பொருட்கள் உண்பவளாக இருந்தேன். எனக்கு வீசிங் (இளைப்பு), உடல் வலி, அதிகமாக வியர்த்தல் மற்றும் அதிகாலையில் தும்மல் முதலிய பிரச்னைகள் இருந்தன. எனது மூத்த மகள் 5 வயதாக இ ருந்த போது அவளுக்கு நான் தினமும் 3 டம்ளர் பால் கொடுத்து வந்தேன். அவளுக்கு மிகுந்த சத்தான உணவான பாலும், முட்டையும் கொடு ப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் அவ ளுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் மாதம் ஒரு முறையாவது டாக்டரிடம் செல்வேன். நாம் மிகச்  சிறந்த உணவு என கூறப்படும் முட்டையும் பாலும் தானே  கொடுக்கிறோம் பிறகு ஏன் அவளுக்கு  அடிக்கடி உடல்நிலை  சரியில்லாமல் போகிறது  என நான் சிந்திப்பதுண்டு. திரு. மு.அ.அப்பன் அவர்கள் எழுதிய ‘ இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து என்ற புத்தகத்தில் எனக்கு அதற்கான விடை கிடைத்தது.  இவர் தற்போது தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினத்தில் வசித்து வருகிறார். 70 வயதி லும் ஆரோக்கியமாக உள்ளார். அப்புத்தகத்தின் முன்னுரையில் அவர் தனக்கு இளவயதில் தொழுநோய் வந்து கை, கால் அனைத்தும் அழுகிய  நிலையில் பிற மருத்துவம் எதுவும் பயன் தராத போது    தனக்கு இயற்கை உணவு எவ்வாறு  கைகொடுத்தது என்பதை கூறியிருப்பார். இதற்கு  வழிகாட்டியவர் அவருடைய மூத்த சகோதரராகிய இராமகிருஷ்ணர் ஆவார். அப்புத்தகத்தில் இயற்கை உணவு உண்டு நோய் குணமானவர்களின்  அனுபவ உரைகள் இடம் பெற்றிருந்தது. அதில் கோமா, வலிப்பு நோய், ஆஸ்துமா, கேன்சர் மற்றும் ஆங்கில மருத்துவர்களால் கைவிடப்பட்டு  பிறகு இயற்கை உணவினால் குணமடைந்த  நோயாளிகளின் அனுபவ உரைகளும் அடங்கும். ஆச்சர்யமடைந்த நான் எனது உணவில் அசைவ  உணவை முழுமையாக நிறுத்தினேன். பால் பொருட்கள் கொண்ட உணவையும் குறைக்க ஆரம்பித்தேன். அதே சமயம் இயற்கை உணவையும் சிறிது  சிறிதாக எனது உடலில் சேர்த்த ஆரம்பித்தேன். சிறிது சிறிதாக எனது உடலில் இருந்து நோய்கள் எந்த மருந்தும், சிகிச்சையும் இல்லாமல் விலக  ஆரம்பித்தது. இயற்கை உணவை பற்றி அறிவதற்கு முன்னால் நான் தினசரி 2 லிட்டர் பால் வாங்குவேன். நான் தற்போது 4 வருடங்களுகு பிறகு  பால் மற்றும் பால் பொருட்களை முழுமையாக நிறுத்திவிட்டேன். தற்போது எங்கள் குடும்பம் ஆரோக்யமாக உள்ளது. முன்னதாக நான் எனது  இளைய மகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்காக் முட்டையை நிறைய உண்டதால் 75 கிலோவாக எறியிருந்த என்னுடைய எடை 51 கிலோவிற்கு  வந்தது. (எந்த வித யோகா மற்றும் உடற்பயிற்சியும் இல்லாமல்). தற்போது 1 வேளை மட்டும் சமைத்த உணவு உண்டு வருகிறேன். எனது கு ணங்களிலும் பல நல்ல மாற்றங்கள் ஏற்ப்பட்டிருக்கிறது. நான் தற்போது சுறுசுறுப்பாகவும் ந்ல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடனும்  உள்ளேன். வீட்டு வேலை மற்றும் அலுவலக வேலை இரண்டையும் பணியாள் இல்லாமல் சமாளிக்க முடிகிறது. நான் கம்ப்யூட்டரில் இரவு  தொடர்ந்து கண் விழித்து பணி செய்ய வேண்டியிருக்கும். ஆனால் நான் இதுவரையில் கண்ணாடி அணியவில்லை. கண் எரிச்சல், கண்ணில் நீர்  வடிதல் போன்ற தொந்தரவுகள் இல்லை.இந்த கட்டுரையை படிக்க நேரும் அனைவரும் இயற்கை உணவு உண்டு ஆரோக்கியமடைய வேண்டு கிறேன்.

                      இயற்கை உணவு என்றால் என்ன?

        இயற்கை அன்னை நமக்கு தயாரித்து வழங்கும் உணவையே இயற்கை உணவு என்கிறோம். (சூரிய வெப்பத்தால் சமைக்கப்ப ட்ட உணவு). இயற்கை உணவை அதன் தன்மை மாறாமல் (சமைக்கமால், வேகவைக்காமல், வறுக்காமல்) அப்படியே பச்சையாக உண்ண வேண்டும்.  நாம் உணவை சமைப்பதால் அதன் சத்துக்கள் அழிந்து விடுகின்றன. நாம் இறந்த உணவையே உண்கிறோம். அதனால் தான் மனிதன்  நோயாளி  ஆகிறான்.  உலகில் வேறு எந்த உயிரினமும் சமைத்து உண்பதில்லை.

        மனிதன் சைவமா?

(1) மனிதன் மற்றும் தாவர பட்சிணிகள் நீரை உறிஞ்சி குடிக்கும். ஆனால் மாமிச உணவுகள் நீரை நக்கி குடிக்கும்.
(2) மனிதனுக்கும், தாவர பட்சிணிகளுக்கும் நீளமான சிறுகுடல் இருக்கும். ஆனால் மாமிச பட்சிணிகளுக்கு சிறுகுடல் நீளம் குறைவாக இருக்கும்.
(3) மாமிச பட்சிணிகளுக்கு மாமிசத்தை கிழித்து உண்ண கோரைப் பற்கள் உண்டு.  ஆனால் நமக்கு உணவை நன்கு மென்று உண்ணக் கூடிய  வகையில் பற்கள் அமைந்துள்ளது.
(4)சைவ உணவு உண்போருடைய ஆயுட்காலம் அசைவ உணவு உண்போருடைய ஆயுட்காலத்தை விட அதிகம்.

        மனிதன் ஒரு பழந்தின்னி
(1)நிலத்திற்கு கீழ் விளையும் பொருட்களை உண்ணும் வகையில் பன்றி, எலி, முயல், போன்ற மிருகங்களுடைய வாய் அமைப்பு நிலத்தை தோண்டு வதற்கு ஏற்றாற் போல் அமைந்திருக்கும்.
(2)மேய்ச்சல் மிருகங்களின் பற்கள் மற்றும் வாய் அமைப்பு புற்களை அசை போட்டு சாப்பிடும் வகையில்
அமைந்திருக்கும்.
(3)குரங்குகள், அணில்கள் போன்ற மிருகங்களுக்கு மரத்திற்கு மரம் தாவி பழங்களை உண்ணும் வகையில் அதனுடைய உடலமைப்பு இருக்கும்.
(4)மனிதனால் மட்டும் தான் இரண்டு கால்களால் நின்று பழங்களை பறிக்கவும், உயர்ந்த மரங்களில் ஏறவும் முடியும்.

    இதனால் நாம் பழந்தின்னி வகையை சேர்ந்தவர்கள் என்பதை அறியலாம்.

    அதனால் நாம் மெதுவாக அசைவ உணவிலிருந்து--- சைவ உணவிற்கும் பிறகு அதில் பால் பொருட்களை தவிர்த்தும் பிறகு  இயற்கை உணவிற்கும் பிறகு பழ உணவிற்கும் மாற முயற்சிக்க- வேண்டும்.

        பால் மற்றும்முட்டை&சைவமா?அசைவமா?

பால்

    மனிதனுக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அதன் பிறகு பாலை ஜீரணிக்கும் என்சைம்கள் நம் உடலில் சுரப்பதில்லை. பால்  நம்முடைய உணவே அல்ல. அது பசு தன்னுடைய கன்றுக்காக சுரப்பது. நாம் அதை நம் சுயநலத்திற்காக திருடிக்கொண்டிருக்கிறோம். அதை  தாய்மை அடைந்த பெண்களாவது எவ்வளவு பெரிய பாவம் என்பதை உணர வேண்டும். பாலில் கால்சியம், புரதம் போன்ற சத்துக்கள் இருப்பதாக  அலோபதி மருத்துவர்கள் சொல்லுவார்கள்.  ஆனால் பசுவிற்கு அந்த சத்துக்கள் பச்சை புற்களை சாப்பிடுவதில் தானே கிடைக்கிறது.  நாமும்  அதை போலவே உண்டு அந்த சத்துக்களை பெற முடியும். சளி, இருமல், ஈஸ்னோபீலியா, மூச்சிரைத்தல், ஆஸ்துமா, போன்ற நோய்கள் அசைவம்,  பால் மற்றும் பால் பொருட்களை நிறுத்தினால் குறைவதை கண்கூடாக காணலாம்.


முட்டை
    மேற்சொன்ன விளக்கம் முட்டைக்கும் பொருந்தும்.  முட்டை கோழி குஞ்சு பொறிப்பதற்கு தானே தவிர நாம் உண்பதற்காக அல் ல.  அது கருகலைப்பிற்கு சமமாகும்.

    முட்டை மற்றும் பால் சைவமா, அசைவமா என நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.

        அசைவப்புரதம் நமக்கு தேவையா?

    விலங்குகளிடமிருந்து கிடைக்கக்கூடிய புரதத்திற்கும், செடிகளிடமிருந்து கிடைக்ககூடிய புரததிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ள ன.  அசைவப் புரதம் (முட்டை, கறி, கோழி, பால், பால் பொருட்கள்) மனிதனுக்கு ஏற்றவை அல்ல. மனிதனின் ஜீரண மண்டலம் அசைவப் புரதத் தை ஜீரணிக்கும் வகையில் அமைக்கப்படவில்லை. அது மாமிச பட்சிணிகள் (கார்னிவோரஸ்) மற்றும் ஓம்னிவோரஸ் (சைவம் மற்றும் அசைவம்  இரண்டும் உண்பவை) ஆகியவற்றிலிருந்து வேறுபடுகிற்து. அவன் ஒரு பழந்தின்னி வகையை சேர்ந்தவன்.  பழங்களும், கொட்டைபருப்புகளும் தான்  அவனுடைய உணவு. அசைவப் புரதம் உடலில் மட்டுமல்லாமல் மனதிலும் நோயை உண்டு பண்ணுகிறது.  அசைவ உணவு நிறைய உண்போர்  மிகுந்த கோபம் கொள்பர். அசைவ உணவு மூளையின் சக்தியையும் துடிப்பையும் குறைத்து விடும். ஒரு மனிதன் அசைவ உணவையும் பால்  பொருட்களையும் தவிர்த்தால் 50% நோயுலிருந்து விடுதலை அடைந்து விடுவான்.  மாமிச பட்சிணிகள் கூட பச்சைக் கறியையே சாப்பிடுகிறது.  மனிதன் ஒருவன்  தான் பிணங்களை வறுத்து, பொரித்து சாப்பிட்டு தன்னை நாகரிகம் அடைந்தவன் என்று வேறு கூறிக் கொள்கிறான்.


        இயற்கை உணவு உண்டால் நடப்பது என்ன?

     நாம் இயற்கை உணவு உண்ணும் பொழுதோ அல்லது இயற்கை சக்திகளான மழை, சூரியன், சுத்தமான நீர், சுத்தமான காற்று  போன்றவற்றுடன் தொடர்பு கொள்ளும் பொழுதோ நம் உடலில் சமைத்த உணவினாலோ அல்லது தீய பழக்க வழக்கத்தினாலோ உண்டான கழி வுகள் உடலில் இருந்து வெளியேறத் தொடங்குகிறது. அதனால் தான் பழங்கள் உண்ணும் போது சளி பிடிக்கிறது, வெயிலில் செல்லும் போது  தலைவலியும் மழையில் செல்லும் போது காய்ச்சலும் வருகிறது. ஆனால் நாம் பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும், வெயில், மழை ஒத்துக்கொள்ளாது  என்று கூறி இயற்கையை விட்டு விலகி இருக்கிறோம். மருந்து மாத்திரைகளை உண்டு கழிவுகளை வெளியேறவிடாமல் உடலுக்குள்ளேயே அடக்கி  உடல் நலனை மேலும் கெடுத்துக் கொள்கிறோம்.

        கழிவுகளின் நீக்கம் எப்படி நடக்கும்?

        இயற்கை உணவு உண்ணும் பொழுது நம் உடலில் இருந்து பல வகையில் கழிவுகள் வெளியேறத் தொடங்கு கிறது. அவற்றை கண்டு நாம் பயப்படத் தேவையில்லை.  நம் உடலில் இருந்து அழுக்குகள் வெளியேறுகிறது என நாம் மகிழ்ச்சி அடையவெ  வேண்டும்.
பல வகை கழிவுகள் வெளியேற்றம்

(1) தலைவலி
(2) உடல் வலி
(3) சோர்வு
(4) தூக்கம்
(5) காய்ச்சல்
(6) தோல் வியாதிகள்
(7) வயிற்று போக்கு
(8) சளி, இருமல்
(9) நகங்களின் வழியாக
(10) உடல் துர்நாற்றம்
(11) வாய் துர்நாற்றம்
(12) வாந்தி

    இவை அனைத்தும் நம் உடலில்  இருந்து கழிவுகள் வெளியேறுவதன் அடையாளமே தவிர பயப்படத் தேவையில்லை.   நோயாளியின் மன உறுதி, தைரியம். ஒத்துழைப்பு இவையே முக்கியமாகும்.  இயற்கை உணவால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஒருவர்  நன்றாக புரிந்து கொண்டால் அது அவர் விரைவில் குணமாக உதவும்.

        கழிவுகள் நீங்கும் பொழுது செய்ய வேண்டியது

    கழிவுகள் நீங்கும் பொழுது இயன்ற அளவு ஓய்வு எடுக்க வேண்டும். 

தலை வலி
    எனிமா எடுக்க வேண்டும். தலை வலி குறையும் வரை ஈரமண் பட்டி அல்லது ஈரத்துணிப் பட்டி தலையிலும் அடிவயிற்றிலும்  போட வேண்டும்.  வாழை இலை குளியல், சூரிய ஒளி குளியல் உகந்தது.  நீராவிக் குளியல் மழைக் காலங்களிலும் குளிர் பிரதேசங்களிலும் எ டுக்கலாம்.

உடல் வலி, சோர்வு, தூக்கம், சளி, இருமல் அதிக அளவு பழச்சாறுகள் (சாறுள்ள பழங்களான மாதுளை, ஆரஞ்சு, திராட்சை, நெல்லி, எ லுமிச்சை) எடுத்துக் கொள்ள வேண்டும்.  எலுமிச்சை சாறு குடிக்கும் போது 5 சொட்டு+200 மி.மி. தண்ணீர் எனக் குடிக்க வேண்டும்.  பேரிச்சம்  பழங்கள் நிறைய உண்ணலாம்.

காய்ச்சல்
    எனிமா, ஈரத்துணிப்பட்டி, ஈரமண்பட்டி தலையிலும் அடிவயிற்றுலும் போடலாம்.  பழச்சாறுகள் நிறைய அருந்தலாம்.  காய்ச்சல்  அதிகமாக இருந்தால் இடுப்புக் குளியல் எடுக்கலாம்.

உடல் துர்நாற்றம் மற்றும் வாய் துர்நாற்றம்
    இயற்கை உணவையே தொடர்ந்து கடைபிடிக்கவும்.  வாழை இலை குளியல், மண் குளியல் உகந்தது.

வாந்தி
    கல்லிரலில் உண்டாகும் வெப்பத்தினால் தான் வாந்தி ஏற்படுகிறது.  சிட்ரிக் அமிலம் உள்ள பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை  மற்றும் இளநீர் ஆகியவை குடித்து வந்தால் வெப்பம் தணியும்.  முழு ஓய்வு எடுக்க முடிந்தால் உண்ணா நோன்பு இருக்கலாம். 

தோல் வியாதிகள்
    காய்கறி மற்றும் பழச்சாறுகளை தோலில் பாதிக்கப்பட்ட இடங்களில் போடுவது உகந்தது.  சுத்தமான மண்ணையும் போடலாம்.

வயிற்றுப் போக்கு
    மாதுளம் பழச்சாறும் இளநீரும் நிறைய அருந்த வேண்டும். (அதிக அளவு பழம் வாங்க இயலாதவர்கள் பச்சை இலைச் சாறு  (புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை,கீரை வகைகள்) சேர்த்துக் கொள்ளலாம்.) அதில் நெல்லிக்காயும் சிறிதளவு இஞ்சியும் சேர்க்கலாம்.


        சிகிச்சையின் போது நினைவில் கொள்ள வேண்டியவை

(1) நோயாளி முழு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியுது அவசியம்.
(2) உறக்கம் வந்தால் நன்றாக உறங்க வேண்டும்.
(3) யோகா, மூச்சுப் பயிற்சிகள் தேவையில்லை.
(4) ஒரு நேரம் எனிமா எடுக்க வேண்டும்.
(5) ஜுஸ் பாஸ்டிங் (பழச் சாறு உண்ணா நோன்பு) இருந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
(6) வலி, காயம், வீக்கம் இருக்கும் இடத்தில் ஈரத்துணிப்பட்டி அல்லது ஈர மண் பட்டி போடலாம்.  பூச்சிக்கொல்லி மருந்தோ உரமோ போடாத சு த்தமான மண்ணா இருக்க வேண்டும்.  பேன்சி ஸ்டோர்களில் கிடைக்கும் முல்தானி மிட்டி என்ற மண்ணையும் உபயோகப்படுத்தலாம்.
(7) சிகிச்சை எடுக்கும் பொழுது தேங்காய் மற்றும் இதர கொட்டை பருப்புகளை தவிர்க்கவும்.  ஆனால் உடல் நலம் தேறிய பிறகு கொட்டை பரு ப்புகளை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.  கொட்டைபருப்புகள் சேர்த்தாமல் வெறும் பழ உணவில் இருக்க கூடாது.  நோயாளிக்கு பசி  எடுக்க ஆரம்பித்உடன் சிறிது சிறிதாக கொட்டை பருப்புகளை சேர்த்துக் கொள்ளலாம்.
(8) அக்கு பிரஷர் சிகிச்சை கொடுக்கலாம்.
(9) இரவில் தூக்கமின்மையால் தவிப்பவர்கள் பாதத்தின் நடுவிரலின் அடிப்பகுதியில் அழுத்தம் கொடுக்கலாம்.
(10) முழு இயற்கை உணவுக்கு எனிமா தேவையில்லை.  நோயாளி ஒத்துழைத்தால் எடுக்கலாம்.
(11) நோயாளிகள் குளிராக உணர்ந்தால் ஈரமண் பட்டி, ஈரத்துணிப்பட்டி தேவையில்லை.  அதற்கு பதில் சூடான அல்லது மிதமான சூட்டில் தண் ணீர் உபயோகிக்கலாம். உடலில் இருந்து வெப்பம் வெளியேறாதபடி கால்கள், கைகள், தலை, காதுகளை நன்றாக மூடிக் கொள்ள வேண்டும்.   கையுறைகள், காலுறைகள், ஸ்வெட்டர், போர்வை போன்றவற்றை பயன்படுத்தலாம்.  மொசைக், மார்பிள் போன்ற குளிர்ந்த தரையில் நடக்க  காலணி உபயோகிக்க வேண்டும்.
(12) பசி இல்லா விட்டால் எலுமிச்சை சாறு மற்றும் எனிமா காலை, மாலை இருமுறை எடுக்கலாம்.

        பொதுவாக நினைவில் கொள்ள வேண்டியவை

(1) சக்தி தரும் உணவுகள்&செவ்வாழை, பேரிச்சம்பழம், முந்திரி பருப்பு மற்றும் சாறுள்ள பழங்கள், பழச்சாறுகள்.
(2) தேங்காயை பச்சையாக உண்ணும் போது கொலஸ்ட்ரால் ஆகாது.  அதை சமைக்கும் பொழுது தான் கொலஸ்ட்ராலாக மாறுகிறது.  பச்சை  தேங்காயை எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணலாம். அதில் எந்த தீங்கும் இல்லை.  உடலும் பருமன் ஆகாது.  மற்ற கொட்டை பருப்புகளுக்கும்  இதுவே பொருந்தும்.
(3) பழங்களில் உள்ள இயற்கையான சர்க்கரைக்கு நீரழிவு நோய்(சர்க்கரை வியாதி) வராது. 
(4) உடல் பருமனுக்கு:& உயரத்திற்கு தகுந்த எடை இயற்கை உணவில் தானாகவே வந்து விடும்.
(5) மெலிந்த உடலுக்கு:& முளை கட்டிய பயிறு வகைகள் எடையை அதிகரிக்க உதவும்.

        சைவ, அசைவ மற்றும் இயற்கை உணவிற்குள்ள வித்தியாசங்கள்
    சைவ உணவிற்கும் இயற்கை உணவிற்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இயற்கை  உணவு என்பது உணவை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவது.  சைவ உணவு என்பது இயற்கை உணவை சமைத்து சாப்பிடுவது.

சைவ/அசைவ உணவு                 இயற்கை உணவு
(1) கொல்லும் வலிமை               இழுக்கும் வலிமை
   (சிங்கம், புலி, சிறுத்தை)         (யானை)
(2) நீண்ட நேரம் வேலை            நீண்ட நேரம் சோர்வு
    செய்ய வலு இருக்காது         இல்லாமல் உழைக்கலாம்
(3) அஜீரணம் மற்றும் மலச்     அஜீரணம், மலச்சிக்கல்
    சிக்கல் இருக்கும்                     இருக்காது
(4) நோயற்ற வாழ்விற்கு         நோயற்ற வாழ்விற்கு
      உத்தரவாதமில்லை            உத்திரவாதம்
(5) வெறுப்பு                                     கருணை
(6) காமம்                                           காதல்                
(7) பிடிவாதம்                                 வைராக்கியம்
(8) அமைதுயின்மை                  அமைதி
(9) கோபம்                                      பொறுமை
(10) ஆடம்பரம்                             எளிமை
(11) உலக ஆசைகள்                 தெய்வீக ஆசைகள்
(12) கோழைத்தனம்                   கம்பீரம், தைரியம்
(13) சுயநலம்                                 பொது நலம்
(14) சோம்பேறித்தனம்           சுறுசுறுப்பு
(15) சோர்வு                                   பலம்   
    இயற்கை உணவு நம் மனநிலையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.  நம் குணங்களிலும் நல்ல ஆரோக்கியமான மாற்றங்களை காணலாம்.

        இயற்கை உணவினால் நம் சுவாசத்தில் ஏற்படும் மாற்றம்

     நம் சுவாசம் ஆழமாக ஆக நம் ஆயுட்காலம் அதிகரிக்கும்.  வேகமாக மூச்சு விடும் விலங்குகள் (எ.க நாய்) சிறிது காலமே வாழும்.  ஆனால்  ஆமை 300 வருடங்கள் வாழ காரணம் அதன் ஆழமான மூச்சே ஆகும்.  மனிதர்களாகிய நாம் நம் ஆயுட்காலத்தை நம் உணவை வைத்து தீர்மானி த்துக் கொள்ளலாம்.  ஆழமாக சுவாசிப்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.  வேகமாக மூச்சு விடுபவர்கள் நோயாளிகளாக இருப்பார்கள்.

    இயற்கை உணவு உண்ணும் போது நம் உடல் தூய்மை அடைகிறது. நம் உடல் தூய்மை அடைய அடைய நம் சுவாசமும் ஆழமா கும்.  இதனால் நாம் ஆரோக்கியமாகவும், அமைதியாகவும், மகிழ்ச்சி மற்றும் கவலை அற்ற மனநிலையுடனும் வாழலாம்.

இயற்கை உணவு உண்ண ஆரம்பிப்பது எப்படி?

    சமைத்த உணவிலிருந்து இயற்கை உணவிற்கு மாறுவதற்கு மிகுந்த மனஉறுதியும் சுயகட்டுப்பாடும் தேவை. முதலில் ஒரு வேளை  இயற்கை உணவு உண்ண ஆரம்பிக்கலாம்.  (காலை சிற்றுண்டி அல்லது இரவு உணவை இயற்கை உணவாக உண்ணலாம்.) அளவு கிடையாது.   எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணலாம். பிறகு சிறிது காலம் கழித்து அதையே இரண்டு நேரமாக அதிகரிக்கலாம்.  பிறகு ஒரு நாள் முழு  இயற்கை உணவிற்கு மாறமுடியும்.  இதனிடையில் நாம் அசைவம், பால் மற்றும் பால் பொருட்களை விட சிறிது சிறிதாக முயற்சி செய்ய வேண் டும்.  இது சிறிய வியாதிகளுக்கு பொருந்தும்.  கேன்சர், சிறுநீரக பிரச்னை, இதய நோய் போன்ற நோய்கள் உள்ளவர்கள் முழு இயற்கை  உணவிற்கு உடனடியாக மாற வேண்டும்.

    முதலில் இயற்கை உணவு உண்ண ஆரம்பிக்கும் போது சிறிது சிரமமாகவே இருக்கும்.  சமைத்த உணவை நினைத்தே நாக்கும்  மனமும் ஏங்கும். நம் முன்னோர்கள் பழங்காலத்திலேயே சமைத்து உண்டு வந்துள்ளார்கள்.  அது பழக்கமாக நம் ஒவ்வொரு செல்லிலும் பதிந்து ள்ளது.  அதனால் நாம் இந்த பழக்கத்தை விட்டு வெளியே வர பொறுமையாக முயற்சிக்க வேண்டும். முதலில் பசி போன்ற ஒரு சங்கட உணர்ச்சி  இருந்து கொண்டே இருக்கும். குடிகாரன் குடிக்கு அடிமையாகி உள்ளதை போல  மனித குலமே சமைத்த உணவுக்கு அடிமையாக உள்ளது.  அதனால் குடிப்பது நல்லது என்று யாரும் முட்டாள்தனமாக கூறமாட்டார்கள். மெதுவாக இயற்கை உணவிற்கு நம் உடல் பழகி விடும். சமைத்த  உணவின் மேல் உள்ள ஆசையை குறைக்க தியானம் உதவும்.

    வருமுன் காப்பது நல்லது.  நமக்கு பிடித்த பழங்களையும் கொட்டைபருப்புகளையும் நிறைய உண்ணலாம்.  கொட்டை பருப்புகள்  கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  வெறும் பழங்கள் மட்டும் போதாது. சிறிது காலம் கழித்து நாம் உண்ணும் அளவு குறைவதை  காணலாம். ஆரோக்கியமான உடலுக்கு சிறிதளவு உணவே போதுமானது.


        சாப்பிடும் முறை

     மோனோ டயட் (ஒரு நேரத்தில் ஒரு உணவை சாப்பிடுவது) நல்லது.  பல விதமான பழக் கலவை அல்லது காய்கறிக்  கலவையாக (சாலட்) உண்ணாமல் ஒரு நேரத்தில் ஒரு பழத்தையோ அல்லது ஒரு கொட்டை பருப்பையோ மட்டும் உண்பது.

    பல வித உணவுகளை கலந்து உண்ண வேண்டுமென்றால் முதலில் கொட்டைபருப்புகளை உண்டு பிறகு பழங்களை உண் ணவேண்டும். கலோரி கணக்குகள் தேவையில்லை.  நம் உயரத்திற்கு ஏற்ற எடை தானாக வந்து விடும்.

    இயற்கை உணவை பொருத்த வரை அளவு தேவையில்லை.  நமக்கு பசி உணர்வு மறையும் வரை எவ்வளவு வேண்டுமானாலும்  உண்ணலாம்.  தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் குடிக்கலாம். 
இயற்கை உணவிற்கும் சமைத்த உணவிற்கும் ஜீரண முறை வேறுபடுவதால் இரண்டையும் ஒரே நேரத்தில் கலந்து உண்ணாமல் இருப்பது நல்லது.   அஜீரணக் கோளாறை தவிர்க்க உணவை நன்றாக மென்று உண்ண வேண்டும்.  நீரையும், பழச்சாறுகளையும் உமிழ்நீருடன் நன்றாக கலந்து கு டிக்க வேண்டும். 

        கேள்விகள் பல & பதில் ஒன்று

(1) மனிதனிக்கு மட்டும் ஏன் வியர்க்கிறது?
(2)ஏன் பறவைகள் கண்டம் விட்டு கண்டம் பறந்தாலும் சோர்வடைவதில்லை? ஏன் மனிதனுக்கு சிறிது தூரம் பயணம் செய்தவுடன் பயணக்க¬ ளப்பு ஏற்ப்படுகிறது?
(3) ஏன் மனிதனுக்கு மட்டும் இரத்த அழுத்தம், நீரழிவு நோய், புற்று நோய், வலிப்பு நோய், தொழு நோய் போன்ற நோய்கள் வந்து தன் ஆயுட்  காலம் முடியுமுன்னரே இறக்கிறான்?
(4) பணம் இருந்தும் மனிதன் ஏன் மகிழ்ச்சியாக இருப்பதில்லை?
(5) ஏன் மனிதர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்?
(6) ஏன் மனிதன் தான் இறந்த பிறகு சிறு தூசியை கூட எடுத்துச் செல்ல முடியாது என தெரிந்தும் பணம், புகழ் என முட்டாள்த் தனமாக  அலைகிறான்?
(7) உண்பது நாழி, உடுப்பது இரண்டே எனும் பொழுது ஏன் மனிதர்கள் ஆடை மேல் மோகம் கொண்டு அலைகிறார்கள்?
(8) பணமும், படிப்பும் மகிழ்ச்சியை கொடுக்கும் என்றால் படித்த பணக்கார மனிதர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?

விடை: ஏனென்றால் மனிதன் மட்டுமே உணவை சமைத்து உண்கிறான்.


        யோகா, ஜிம்னாஸ்டிக்ஸ், உடற்பயிற்சிகள் சில உண்மைகள்

    இயற்கை உணவை உண்ண ஆரம்பித்த உடன் உடலின் வளைவுத் தன்மை அதிகரிக்கும்.  குரங்குகள், அணில்கள் போன்ற  விலங்குகள் மரத்திற்கு மரம் தாவி குதித்தாலும் கீழே விழுந்தாலும் எலும்பு முறிவு ஏற்படுவதில்லை.  அவை ஜிம்முக்கோ யோகா வகுப்புக்கோ   செல்வதில்லை. இ யற்கை  உணவு உண்டால் நாம் பல யோகாசனங்களை  சுலபமாக செய்யலாம். தினசரி யோகா  
உடற்பயிற்சி செய்ய தேவையில்லை.  அந்த நேரத்தை நாம் தியானம் செய்ய பயன்படுத்தலாம். 

    உடற்பயிற்சியினால் வெளிப்புற தசை வளர்ச்சி மட்டுமே அதிகரிக்கும்.  உள் உறுப்புகள் உறுதியாகாது.  நோயில்லாமல் இருக்க வும் உத்திரவாதமில்லை.  பலவான்கள் எனக் கூறிக் கொள்ளும் பலர் வாழ்க்கையின் சிறிய பிரச்னைகளை சந்திக்க கூட பயப்படுவர்.  இயற்கை  உணவும் தியானமும் மட்டுமே உடல், மனம் இரண்டையும் வலுவாக்கும்.  நோயற்ற வாழ்விற்கும் உட்புற மனமகிழ்ச்சிக்கும் இயற்கை உணவே  சிறந்தது.  உடற்பயிற்சியால் எடையை வேண்டுமானால் கட்டுப்பாட்டில் வைக்கலாம். ஆரோக்கியத்திற்கு உத்திரவாதமில்லை.

        பயனுள்ள புத்தகங்களின் பட்டியல்
(1) இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து & மூ.அ.அப்பன்
(2)நம் நலம் நம் கையில் & தேவேந்திர வோரா
(3)எளிய முறை உடற்பயிற்சி&வேதாத்திரி மகரிஷி

மேலும் ஆர்வமுள்ளவர்களுக்கு
(1)எது மனித உணவு? & ம.கி. பாண்டுரங்கம், சென்னை
(2)நோயின்றி வாழ முடியாதா? & மூ. இராமகிருஷ்ணன்
(3)தென்னைச் செல்வம் & கே.எஸ். லெட்சுமணன்
(4) வாழைச் செல்வம் & கே.எஸ்.லெட்சுமணன்
(5)இயற்கை மருத்துவம்& க. அருணாச்சலம்
(6) மருந்தில்லா மருத்துவம் & கே.ஆர். வேலாயுதராஜா

      இயற்கை சிகிச்சை முறைகள்
    (1) வாழையிலைக் குளியல்
    (2) மண் குளியல்
    (3) நீராவிக் குளியல்
    (4) முதுகு தண்டுக் குளியல்
    (5) இடுப்புக் குளியல்
    (6) கண் குவளை
    (7) மூக்கு குவளை
    (8) எனிமா
    (9) ஈரத்துணிப்பட்டி
    (10) ஈரமண் பட்டி
    (11) சூரிய ஒளி குளியல்
   
        வாழையிலைக் குளியல்

(1) 10லிருந்து 15 வரை முழு நீள வாழையிலை ஒரு நபருக்கு தேவைப்படும்.
(2) இந்த சிகிச்சையை பகல் 12 மணிக்கு முன்னால் செய்வது நல்லது. நல்ல சூரிய வெள்ச்சம் இந்த சிகிச்சை முறைக்கு தேவைப்படும்.  வியர்வையின் முலமாக இந்த சிகிச்சை முறையில் கழிவுகள் வெளியேறும். இதய நோயாளிகள் இந்த சிகிச்சையின் போது சிறிது சிறிது  படபடப்பாக உணருவர். அதற்கு பயப்படத் தேவையில்லை.
(3) இந்த சிகிச்சை மூலமாக வியர்வை அதிகமாக வெளியேறுவதால் சிகிச்சைக்கு முன்னர் எவ்வளவு தண்ணிர் அருந்த முடியுமோ அவ்வளவு த ண்ணீர் அருந்தவேண்டும்.
(4) மிகவும் குறைந்த அளவு உடைகளே போதுமானது. ஒருசிறிய ஈரத்துணியை தலையின் மேல் போட்டுக் கொள்ள வேண்டும்.
(5) நல்ல சூரிய ஒளி உள்ள இடத்தில் ஒரு பாயை விரிக்கவும்.  அதற்கு மேல் ஒரு போர்வையை தண்ணீரில் நனைத்து போடவும்.
(6) போர்வையின் மேல் சிறிய சணல் கயிறு அல்லது நாடா போன்றவற்றை 5 (அ) 6 எடுத்து போர்வையின் மேல் சிறிது இடைவெளி விட்டு  போடவும்.  (சிகிச்சை எடுப்பவரை வாழையிலையில் கட்டுவதற்காக). இதற்கு மேல் வாழையிலைகளை விரிக்கவும். நாம் உண்ணும் பகுதி நமது  உடலின் மேல் படுமாறு இருக்க வேண்டும்.  சிகிச்சை எடுப்பவரை வாழையிலையில் படுக்க வைத்து மேல் பக்கத்திலும் வாழையிலையை வைத்து  மூடி கீழே இருக்கும் சணல் கயிற்றினால் காற்று உள்ளே புகாதவாறு கட்டி விடவும். மூச்சு விட மூக்கின் அருகே ஒரு சிறிய துளை செய்து விட வும்.
(7) 20 முதல் 40 நிமிடங்கள் வரை இந்த சிகிச்சையை செய்யலாம்.  மிகவும் சிரமமாக உணர்ந்தால் கட்டுக்களை அவிழ்த்து விட்டு விடலாம்.
(8) 1/2 முதல் 1 லிட்டர் வரை கழிவுகள் வியர்வை மூலமாக வெளியேறி இருக்கும்.
(9) பிறகு காற்றோட்டமான நிழலுள்ள இடத்தினில் 1/2 மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும். பிறகு பச்சை தண்ணீரில் குளிக்க வேண்டும்.
(10) உடல் பருமனுக்கு இது மிகவும் சிறந்த சிகிச்சையாகும்.
(11) இலைகளில் விஷமேறி விடுவதால் இதை செடி, கொடிகளுக்கு உரமிடுவதோ ஆடு, மாடுகளுக்கு தீவனமாக கொடுப்பதோ கூடாது.
(12) இந்த சிகிச்சை மேற்கொண்டால் சிறிது களைப்பாகவோ, தலைவலியோ இருக்கும். பயப்படத் தேவையில்லை.
(13) ஆரோக்கியமாக உள்ளவர்கள் இதை மாதம் ஒரு முறை செய்தால் போதும்.  நோய்க்காக சிகிச்சை எடுப்பவர்கள் 2 வாரத்திற்கு ஒரு முறை  செய்யலாம். இது இரத்தத்தை சுத்தம் செய்கிறது.

        மண் குளியல்

(1) செம்மண், களிமண், புற்று மண் (அ) ஒட்டக் கூடிய தன்மை உள்ள எந்த மண்ணையும் பயன் படுத்தலாம். மண் குளியல் எடுக்க வேண்டிய  நாளைக்கு முதல் நாள் இரவே மண்ணை நீரில் குழைத்து வைத்து கொள்ள வேண்டும்.  இது மண்ணை குளிர்ச்சி அடைய வைத்து தோலுக்கு  தேவையான நல்ல பாக்டீரியாக்களை வளர்ச்சி அடைய வைக்கிறது.
(2) பகல் 12 மணிக்கு முன்னர் எடுக்க வேண்டும்.
(3) மிகக் குறைந்த அளவு ஆடைகளே அணிய வேண்டும்.
(4) தலை உட்பட எல்லாப் பகுதிகளிலும் மணலை பூசிக் கொள்ள வேண்டும்.  புண்களிலும் பூசலாம்.
(5) சூரிய ஒளியில் நிற்க வேண்டும்.
(6) 1/2 மணி நேரத்திற்கு பிறகு (அ) மணல் முழுமையாக காய்ந்த பிறகு நிழலில் 1/2 மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும்.
(7) பிறகு பச்சை தண்ணீரில் குளிக்கவும்.  சோப்பு, ஷாம்பூ, சிகைக்காய் எதுவும் தேவையில்லை.  மணலையே நன்றாக தண்ணீர் சேர்த்து தேய்த்து  மெதுவாக மசாஜ் செய்து குளிக்கவும்.
(8) கழிவுகள் இம்முறையில் வெளியேறும்.  வியர்வைத் துளைகள் சுத்தமாகும்.  பிரஷ்ஷாக இருக்கும்.
(9) தோல் வியாதிகளான சொரியாஸிஸ், வெண் குஷ்டம் மற்றும் நரம்பு பிரச்சனைகள், வாதம், தொழு நோய் போன்றவற்றிற்கு இது நல்ல பலன்  தரும்.
(10)  அபார்ட்மென்ட் மற்றும் நகரங்களில் வாழும் உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்து இல்லாத நல்ல மணல் கிடைக்கப் பெறாதவர்கள் ’முல்த் தானி மிட்டி‘ என கூறப் படும் மண்ணை பேன்சி ஸ்டோர்களில் வாங்கி பயன் படுத்தலாம்.

        நீராவிக் குளியல்

    மழைக் காலங்களிலும், குளிர் நாடுகளிலும் நீராவிக் குளியல் பயன் தரும். இந்த இடங்களில் வியர்வை மூலமாக கழிவுகள்  வெளியேறுவது மிகவும் குறைவு.  இந்த குறையை நீராவிக் குளியல் போக்குகிறது. இதை வீடுகளிலேயே எடுக்கலாம். துளசியிலை, வேப்பிலை,  நொச்சி இலை போன்றவற்றை பயன்படுத்தலாம். பிரஷர் குக்கர் மற்றும் கேஸ் டியூப் போதுமானது.  குக்கரில் தண்ணீர் வைத்து குக்கரை சூடு ப டுத்தவும். கேஸ் டியூப்பை குக்கரில் ஆவி வரும் இடத்தில் பொருத்தவும்.  நீராவிக் குளியல் எடுப்பவரை ஒரு ஸ்டூல் (அ) சேரில் உட்கார வைத்து 3  (அ) 4 போர்வைகள் எடுத்து மூடவும். குக்கரில் இருந்து வரும் நீராவியை போர்வையின் வழியாக உள்ளே செலுத்தவும்.(சிகிச்சை பெறுபவர்  உடலின் மேல் ஆவி படக் கூடாது). பிரஷர் குக்கர் கீழே விழாதவாறு ஒருவர் கவனித்துக் கொள்ள வேண்டும்.  நன்றாக வியர்க்க வேண்டும்.   சிகிச்சை பெறுபவர் இயன்ற வரை உள்ளே இருக்க வேண்டும். சளி, ஆஸ்த்துமா, உடல் பருமன் உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும்.

        முதுகு தண்டு குளியல்

    இதை எடுக்க தேவையான சாதனம் இயற்கை சிகிச்சை மையத்தில் கிடைக்கும். 1/2 மணி நேரம் முதுகு தண்டு படுமாறு இதில் ப டுக்க வேண்டும்.  பிறகு பச்சை தண்ணீரில் குளிக்க வேண்டும்.  முதுகு வலி, முதுகு தண்டு பிரச்னை, உயர் இரத்த நோயாளிகளுக்கு இது பயன்  தரும்.

        இடுப்புக் குளியல்

    இதற்கு தேவையான சாதனமும் இயற்கை சிகிச்சை மையத்தில் கிடைக்கும்.  அல்லது ஒருவர் கால்களை வெளியில் விட்டு உட் காரக் கூடிய வகையில் உள்ள பாத்திரத்தையும் பயன்படுத்தலாம்.  பாத்திரம் குட்டையாகவும் அகலமாகவும் இருந்தால் நல்லது.  பாதி பாத்திரத்தில்  நீரை நிரப்பி அதில் அமரவும்.  கால்கள் வெளியில் தரையில் படாதவாறு இருக்க வேண்டும்.  கால்களை மரக்கட்டைகளில் வைத்துக் கொள்ளலாம்.  இதனால் உடலின் காந்த சக்தி தரையில் பாயாதவாறு இருக்கும்.  ஒரு சிறிய துணியை வைத்து வயிற்றை மசாஜ் செய்து கொண்டே இருக்கவும்.   40 நிமிடங்கள் வரை அமரலாம்.  15 நிமிடங்களுக்கு பிறகு குளிக்கலாம்.  ஒரு முறை உபயோகித்த நீரை மீண்டும் உபயோகிக்கக் கூடாது.  இது  வயிறு சம்மந்தமான பிரச்னைகளுக்கு உகந்தது. வயிற்றை குளிர்ச்சி அடைய செய்து எல்லா நோய்களுக்கும் மூலகாரணமான மலச்சிக்கலை கு றைக்கிறது.  தலைவலி மற்றும் காய்ச்சலின் போது இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

        கண் குவளை

    இது பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட ஒரு சிறிய சாதனமாகும். இது இயற்கை சிகிச்சை மையங்களில் கிடைக்கும்.  அல்லது ஒரு  நீர் நிரம்பிய சிறிய கிண்ணத்தையும் பயன்படுத்தலாம்.  இது இரவு நேரம் விழித்து பணி புரிபவர்கள், கணினியில் பணி புரிபவர்கள், டி.வி.  பார்ப்பவர்கள், தூசியில் பணிபுரிபவர்கள், வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கும் பயன்படும்.  இது கண்களை குளிர்ச்சி அடைய வைக்கும்.
    இந்த குவளையில் கண்ணை  வைத்து இடது மற்றும் வலது புறமாக சுழற்ற வேண்டும். (5 நிமிடங்கள்). முதலில் சிறிது சிரமமாக  இருக்கும்.  இது கண்களை பாதுகாக்க ஒரு எளிய வழியாகும்.

        மூக்கு குவளை

    இதற்கான சாதனமும் இயற்கை சிகிச்சை மையங்களில் கிடைக்கும்.  சிறிதளவு உப்பு போட்டு தண்ணீரை வெதுவெதுப்பாக்கி  கொள்ளவும்.  அதற்கென உள்ள சாதனத்தில் இந்த நீரை ஊற்றிக் கொள்ளவும்.  முன்புறம் வளைந்து தலையை மேல்புறமாக திருப்பி வைத்து  கொள்ளவும்.  வாயின் வழியாக மூச்சு விட்டுக் கொண்டு நீரை சிறிது சிறிதாக வலது நாசியில் விடவும்.  நீர் இடது நாசி வழியாக வெளியேறும்.   இதையே இடது நாசிக்கும் மாற்றிச் செய்யவும்.  இது சுவாச சம்பந்தமான பிரச்சனைகளான சளி, சைனஸ், ஆஸ்துமா, டிபி(காச நோய்) போன் றவைகளுக்கு பயன் தரும்.

        எனிமா

    இதற்கான சாதனமும் இயற்கை சிகிச்சை மையங்களில் கிடைக்கிறது. 
    மலச்சிக்கல் உள்ள உடலில் கிருமிகள் உற்பத்தியாகும்.  எனவே இரத்தத்தில் நச்சுக்கள் ஏற்ப்படும்.  உடல் நோய் வாய்ப்படும்.   மலச்சிக்கலினால் உடல் உஷ்ணம் அடைகிறது.  இது மூல வியாதிக்கு காரணம் ஆகிறது.  நாம் வாய் கொப்பளிப்பது போல எனிமா குவளையை  குடலை கழுவ பயன்படுத்தலாம்.  மலச் சிக்கல் இருந்தால் இதனை தினமும் பயன் படுத்தவேண்டும்.  மலச்சிக்கல் இல்லாமல் இருக்க அதிக நார்ச்  சத்துள்ள உணவு(இயற்கை உணவு) உண்ண வேண்டும்.  இயற்கை உணவும் உண்டு நாக்கில் வெள்ளை படலமும் இல்லாமல் இருந்தால் வாரம்
1 முறை எனிமா எடுத்தால் போதுமானது.  மலம் ஒட்டுவது மலச்சிக்கலை குறிக்கிறது.  குழந்தைகள் கூட இதை பயன்படுத்தலாம். தலை வலி,  காய்ச்சல், சளி தொந்தரவுக்கு இதை பயன் படுத்தலாம்.  சமையல் உணவில் இருப்பவர்களுக்கு இது பயன் தரும்.
எப்படி உபயோகப்படுத்துவது?
    எனிமா கப்பை தண்ணீர் ஊற்றி தலைக்கு மேலே ஒரு உயரத்தில் தொங்க விடவும்.  பின் நாசில் வழியாக தண்ணீரை மலத்து வாரத்திற்குள் முன்புறம் குனிந்தவாறு செலுத்தவும்.  நாசிலில் சிறிது எண்ணெய் பூசிக் கொள்ளலாம்.  தண்ணீர் அனைத்தும் குடலுக்குள் சென்ற  பிறகு 20 நிமிடங்கள் வரை அப்படியே இருக்கவும்.  படுத்திருந்தால் மலத்தை அடக்க எளிதாக இருக்கும்.  பலனும் நன்றாக இருக்கும்.  பிறகு மலம்  கழிக்கலாம்.  குடலில் தேங்கியுள்ள நாட்பட்ட கழிவுகள் எல்லாம் வெளியேறும்.  குடிப்பதற்காக பயன் படுத்தும் நீரையே இதற்கும் பயன்படுத்த  வேண்டும்.

        ஈரமண்பட்டி
   
    சுத்தமான மண், புற்று மண், செம் மண், களி மண்(உரமும், பூச்சிகொல்லி மருந்தும் இல்லாதது) தண்ணீருடன் குழைத்து வைத்துக்  கொள்ள வேண்டும்.  ஒரு செவ்வக வடிவத்தில் உள்ள துணியில் மண்ணை வைத்து மண் வெளியே விழாதவாறு மடித்து கொள்ள வேண்டும். 1/2  மணி நேரத்திற்கு மேலாக வைக்கலாம்.  பயணத்தினால் ஏற்படும் உஷ்ணம், காய்ச்சல், தலை வலி, மலச்சிக்கலுக்கு இந்த சிகிச்சை முறை சிறந்தது.   சிகிச்சைக்கு பிறகு எனிமா எடுப்பது நல்ல பலன் தரும்.
       
                                   ஈரத்துணிபட்டி

    மேற் கூறியதை வெறும் பருத்தி துணியை தண்ணீரில் நனைத்தும் செய்யலாம்.

        சூரிய ஒளிக் குளியல்

    குறைந்த அளவு உடை உடுத்திக் கொண்டு நின்றோ, அமர்ந்தோ, படுத்தோ இந்தக் குளியல் எடுக்கலாம்.  சுரிய ஒ:ளி நமக்கு  நிறைய ஆற்றலை வழங்குகிறது.  விட்டமின் டி சுரிய ஒளியில் உள்ளது. அது தலை வலி மூலமாகவும், வியர்வை மூலமாகவும் உடலின் அழுக்கு களை வெளியேற்றி உடலுக்கு தேவையான உஷ்ணத்தையும் தருகிறது.

சூரிய ஒளியின் நன்மைகள்:
    (1) தோல் கேன்சர் சூரிய ஒளி அதிகமாக உள்ள நாடுகளில் மிகவும் குறைவு.
    (2) தோல் வியாதிகள் மிகவும் குறைவு.
    (3) கறுப்பு நிறத் தோலே வெளிர் நிறத்தோலை விட ஆரோக்கியமானது.
    (4) காலை 9 மணிக்கு முன்னரும் மாலை 4 மணிக்கு பின்னரும் இதை எடுக்க வேண்டும்.  சூரியஒளி அதிகமாக உள்ள நாடுகளில்  20 நிமிடத்திற்கு மேல் எடுக்க வேண்டாம்.

        எண்ணெய் கொப்பளித்தல்

    இது இயற்கை சிகிச்சை முறையில் வராவிட்டாலும் இது உடலிலுள்ள கழிவுகளை ஒரு எளிய முறையில் நீக்குகிறது.  இது தீங்கு  விளைவிக்காது.  நோய் அதிகமாக இருக்கும் போது இதை உணவு உண்பதற்கு முன்னர் தினசரி 3 நேரம் செய்ய வேண்டும்.  பிறகு ஒரு நா¬ ளக்கு ஒரு முறை செய்தால் போதுமானது.

செய்முறை:
    சமையலுக்கு பயன்படுத்த கூடிய எந்த எண்ணெய் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.  1 ஸ்பூன் போதுமானது.  வாயில் வை த்து 15 முதல் 25 நிமிடங்கள் கொப்பளிக்க வேண்டும்.  பிறகு அதை விழுங்காமல் துப்பி விட வேண்டும்.  விழுங்கினால் தவறேதும் இல்லை.   ஆனால் விழுங்குவதை தவிர்ப்பது நல்லது.  பிறகு நீரில் வாய் கொப்பளிக்கலாம்.  காலையில் பல் தேய்த்த உடன் இதை செய்யலாம்.  சவ்வூடு  பரவுதல் (ஆஸ்மாஸிஸ்) மூலமாக கழிவுகள் வாய்க்கு இந்த முறையில் வந்து விடுகிறது.

        ஸ்பேஸ் லா(வெளி விதி)
    வெளி விதி என்ன சொல்கிறதென்றால் மக்கள் வசிக்கும் பகுதியில் எந்த இயற்கை உணவு மிகுதியாக கிடைக்கிறதோ அதை  உண்டு வந்தாலே போதும்.  வெளிநாடுகளில் இருந்து உணவை இறக்குமதி செய்ய வேண்டியதில்லை.  வேறு எந்த ஜீவராசிகளும் உணவை  இறக்குமதி செய்து உண்பதில்லை. அவைகள் அவை வசிக்கும் பகுதியில் என்ன உணவு கிடைக்கிறதோ அதையே உண்டு வாழ்கின்றன.  எதில்  புரதச் சத்து, மாவுச் சத்து, கொழுப்பு, விட்டமின்கள், உப்புகள் இருக்கிறது என பார்த்து உண்பதுல்லை.  ஆனால் அவை தங்களின் வாழ்நாளை  ஆரோக்கியமாகவே கழிக்கிறது.  இந்தியாவில் மிகவும் எளிதாக கிடைக்கும் தேங்காய், பேரிச்சை, வாழைப்பழம் இவற்றிலேயே வேண்டிய சத்துக்கள்  அனைத்து உள்ளன.  இவை வருடம் முழுவதும் எளிதாகவும், விலை குறைவாகவும் கிடைக்கும்.  மேலும் அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களையும்  உண்ணலாம்.  (மாம்பழம், சப்போட்டா, தர்பூஸ் போன்றவை). விலை அதிகமான பழங்களை வாங்க இயலாதவர்கள் தேங்காய்ப் பால்,  காய்கறிகளின் ஜுஸ்கள், கீரை(புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை, பாலாக்கு) ஜுஸ்கள் பருகலாம்.  டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள்,  புரதச்சத்து கொண்ட உணவுகள், ஆரோக்கிய பானங்கள் தேவையில்லை.  இயற்கை உணவு உண்டால் போதிய பலம் கிடைக்குமா என்ற  சந்தேகம் கொண்டவர்கள் வெறும் இலை தழைகளை மட்டுமே உண்டு வாழும் யானையையும் அது கொண்டுள்ள அபார வலிமையையும் நினைத் துப் பார்க்கவேண்டும்.  யானை வேற்று ஜீவராசிகளின் பாலையும் அருந்துவதில்லை. முட்டையையும் ஆம்லெட் போட்டு சாப்பிடுவதில்லை.

சமையலுணவில் குறைக்கவேண்டியவை மற்றும் அதற்கு மாற்று உணவு
குறைக்க வேண்டியது        மாற்று உணவு
(1) சர்க்கரை                               வெல்லம், கரும்பு சர்க்கரை கருப்பட்டி
(2) பொடி உப்பு                          கல் உப்பு
(3) கரையாத கொழுப்பு        கரையும் கொழுப்பு
கொண்ட எண்ணெய்            கொண்ட எண்ணெய்
(4) மிளகாய்                                மிளகு
(5) புளி                                           எலுமிச்சை
(6) கடுகு                                        சீரகம்
(7) காபி,டீ                                     லெமன் டீ, ப்ளாக் டீ,
                                                          சுக்கு காப்பி, வரக்காப்பி
(8) பாலிஷ் செய்த அரிசி      அவல், சிகப்பரிசி

    இந்த மாற்று உணவு (மிளகு, எலுமிச்சை, சீரகம் தவிர) சமைத்த உணவை தவிர்க்க முடியாதவர்களுக்கு மட்டும்.  இவை இயற்கை  உணவு அல்ல.  இவற்றினால் சிறிது தீமை குறைவு.

        சாறு உண்ணா நோன்பு (ஜுஸ்பாஸ்டிங்)

    வெறும் நீர் அருந்தி உண்ணா நோன்பு இருக்க முடியாத பட்சத்தில் சாறு உண்ணா நோன்பு இருக்கலாம்.  இதில் பழச்சாறுகள்  மட்டுமே அருந்த வேண்டும். 

நன்மைகள்:
    (1) உணவு திரவ வடிவில் இருப்பதால் ஜீரணத்துக்கு தேவைப்படும் ஆற்றல் மிகவும் குறைவு.  எனவே உடலின் ஆற்றல் முழுவதும்  கழிவுகள் வெளியேற்றத்துக்கு உபயோகப்படுத்தப் படுகிறது.
    (2)உடல் எளிதாக ஆற்றலை கிரஹித்துக் கொள்ளும்.
    (3)சாறுள்ள பழங்களின் ஜுஸ்கள் (திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளம் பழம் போன்றவை) அதிகமான க்ளுக்கோஸ் சத் துக்களை கொண்டுள்ளதால்
உடல் நிலை பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடைய உதவுகிறது.
    (4) மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டோர் இதை ஜீரணிக்க எளிதாக உணருவர்.

        சாறு உண்ணாநோன்பின் போது கவனிக்க வேண்டியவை
    (1) திரவ வடிவில் இருப்பதால் நார்ச்சத்து கிடைப்பதில்லை.
    (2) மலச்சிக்கல் மற்றும் மூலவியாதி இருப்பவர்களுக்கு இது  உகந்தது அல்ல.  அவர்கள் இயற்கை உணவை உள்ளது உள்ள படியே (நார்ச்சத்துடன்) உண்ண வேண்டும்.
    (3) சாறுண்ணா நோன்பின் போது மலச்சிக்கல் ஏற்ப்பட்டால் ஒரு நாளைக்கு ஒரு முறை எனிமா எடுத்துக் கொள்ளலாம்.
இயற்கை உணவும் இரத்தத்தின்தன்மையும்

    இரத்தம் காரத்தன்மை (ஆல்கலைன்) உடையது.  இயற்கை உணவும் காரத்தன்மை உடையது.  எனவே இயற்கை உணவு  எளிதாக இரத்தத்தின் காரத் தன்மையை சமன் செய்யும்.  ஆனால் சமைத்த உணவு அனைத்தும் அமிலத்தன்மை (அசிடிக்) உடையது.  எனவே அது  இரத்தத்தை அமிலத்தன்மை உடையதாக்கும்.  ஆனால் உடலோ மீண்டும் இரத்தத்தை காரத்தன்மை உடையதாக்க போராடும்.  அந்த போராட்டத் தில் உடல் தோல்வியடையும் போது நாம் நோய்வாய்ப்படுகிறோம்.


        அக்கு பிரஷர்(ஒருவரின் குணத்தை மாற்றுவது எப்படி?)

    இது நோய்கள் நீங்க கைகளுக்கும் கால்களுக்கும் அழுத்தம் கொடுக்கும் ஒரு முறையாகும்.  (இது அக்குபங்சர் கிடையாது. இதற்கு  ஊசியோ முறையான படிப்போ தேவையில்லை),  ஆனால் அக்குபிரஷர் மட்டுமே நோய்களை குணமாக்க போதுமானதல்ல.  இயற்கை உணவு  உண்பதே நோய் குணமாக அஸ்திவாரமாகும். 
இயற்கை உணவும் உண்டு அக்கு பிரஷரையும் செய்து வந்தால் நோய் விரைவில் குணமடையும்.  உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பிலிருந்து வ ரும் நரம்புகளும் உள்ளங்காலில் மற்றும் உள்ளங்கையில் முடிவடைகிறது என்ற் உண்மையை கொண்டு அக்குபிரஷர் செயல்படுகிறது. பாதிக்கப்ப ட்ட பாகத்திற்குரிய பாயிண்டில் நாம் நம் கைகளில் மற்றும் கால்களில் அழுத்தம் கொடுத்தால் ஒரு சிறிய மின்காந்த அலை எழும்பி பாதிக்கப்பட்ட  உறுப்பை சென்று அடைகிறது.  இதனால் பாதிக்கப்பட்ட பகுதி குணமடைய ஆரம்பிக்கிறது.
வலியுள்ள இடத்தில் அழுத்த வேண்டும் என்பது அக்குபிரஷரின் விதியாகும். பாதிக்கப்பட்ட பாகத்திற்குரிய பாயிண்டில் நாம் அழுத்தம் கொடுக்கும்  பொழுது நோயின் தன்மைக்கேற்ப வலி தெரியும்.  (இந்த வலி கொடுக்கப்படும் அழுத்தத்தை விட வித்தியாசமாக இருக்கும்.)  வலி அதிகமாக இ ருந்தால் அந்த உறுப்பு அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.  அதற்கு பயப்படத்தேவையில்லை.  இயற்கை உணவு உண்டு அக்கு பிரஷரும் சரியாக செய்து வந்தால் நோயிலிருந்து விரைவில் விடுபடலாம்.

    நம் உடலில் நாளமில்லா சுரப்பிகள் உள்ளன.  அவையாவன:
            (1)பிட்யுட்டரி
            (2)பீனியல்
            (3)அட்ரீனல்
    `        (4) பான்கிரியாஸ்
            (5) நாபிச் சக்கரம்
            (6) தைராய்டு
            (7) பாலியல் சுரப்பிகள் ஆகும்.

    இவை ஒரு மனிதனின் குணத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.  இவை சரியாக செயல்பட்டால் ஒருவர் அன்பு,  தைரியம், கருணை, வைராக்கியம், பொறுமை, எளிமை, பொது நலம், சுறுசுறுப்பாகவும் சந்தோஷமாகவும் இருப்பர்.  இவை சரியாக செயல் படாவி ட்டால் அதிக காமம், கோபம், பிடிவாதம், அமைதியின்மை, சிடுசிடுப்பு, ஆடம்பர பொருட்கள் மேல் மோகம், கோழைத்தனம், அதிக ஆசை, சுயநலம்,  சோம்பேறித்தனம், சோர்வு, தற்கொலை எண்ணம், திருடும் எண்ணம், கொடூரம், பயம் போன்றவற்றுடன் காணப்படுவர்.  எனவே மனரீதியான  பிரச்னை உள்ளவர்கள் இயற்கை உணவு, தியானம் மற்றும் அக்குபிரஷர்(முக்கியமாக நாளமில்லா சுரப்பிகளில் எந்த சுரபி குறைபாடுடன் இ ருக்கிறது என கண்டுபிடித்து அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்) செய்து வந்தால் வியக்கத்தக்க மாறுதல்களை காணலாம்.  குற்றவாளிகளை  கூட இந்த சிகிச்சை முறையால் திருத்தி விட முடியும்.

     நாளமில்லா சுரப்பிகளை தவிர மற்ற உறுப்புகளுக்கு கடைகளில் விற்கப்படும் அக்குபிரஷர் உருளைகளை வாங்கி பயன்படுத் தலாம்.  மேலும் சீப்பு, துணிகிளிப், ரப்பர் பாண்டு, மரக்குச்சி, துணி துவைக்கும் பிரஷ் கூட பயன்படுத்தலாம்.  இவைகளை கொண்டு நாம் டிவி  பார்க்கும் பொழுதும், கணினியில் வேலை செய்யும் பொழுதும், புத்தகங்கள் படிக்கும் பொழுது கூட நேரத்தை வீணாக்காமல் அக்குபிரஷர்  கொடுக்கலாம்.  நாளமில்லா சுரப்பிகளுக்கு மட்டும் கட்டை விரலால் செங்குத்தாக அழுத்தம் கொடுக்க வேண்டும். 

    மேலும் விவரங்களுக்கு 'நம் நலம் நம் கையில்’ என்ற தேவேந்திர வோரா அவர்கள் எழுதிய புத்தகம் உதவும்.  இந்த புத்தகம் நமது  பாரத பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் அவர்களால் பாராட்டப்பட்ட புத்தகமாகும்.  அவர் 90 வயது வரை வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.  இந்த புத்தகம் மேலும் ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி, மராத்தி ஆகிய மொழிகளில் கிடைக்கிறது. பல்வேறு நோய்களுக்கு (கேன்சர், மூளைப் புற்று, எய்ட்ஸ், நீரிழிவு, இரத்த அழுத்தம் உட்பட) அழுத்தம் கொடுக்க வேண்டிய பாயிண்டுகள் புத்தக த்தின் பின்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.  இதை பார்த்து நாமே நமக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய பாயிண்டுகளை கண்டுபிடிக்கலாம்.

    கெட்டப் பழக்கங்களான புகை, புகையிலை, குடிப்பழக்கம், போதை மருந்து போன்றவற்றிலிருந்து விடுபட வேண்டிய பாயிண்டு களும் இந்த புத்தகத்தில் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.  நமக்கு நாமே டாக்டராகிவிடலாம்.  நமக்குரிய சிகிச்சையை நாமே முடிவு செய்து  கொள்ளலாம்.


        உண்ணா நோன்பு

ஸ்பெயின் பொன்மொழி: 100 வைத்தியர்களை அழைப்பதை விட ஒரு வேளை உணவை இழப்பது மேலானது.
ஸ்காட்லாந்து பொன்மொழி:தனக்கு நோய் உண்டாகும் வரை உண்ணும் ஒருவன் நோய் குணமாகும் வரை உண்ணாமலிருக்க வேண்டும்.
    உண்ணா நோன்பு ஒரு உயரிய மருந்தாகும்.  அது ஜீரண மண்டலத்திற்கு ஓய்வு தருகிறது.  பஞ்சத்தால் பட்டினியால் மரணம்  அடைபவர்களை விட பெருந்தீனீ உண்டு மரணம் அடைபவர்களே அதிகம்.  விலங்குகள் கூட உடல் நிலை சரியில்லையென்றால் உண்ணாவிரதம்  இருக்கும்.  மனிதன் மட்டுமே உடல் நிலை சரியில்லாத போதும் உண்டு உடலை சீரழிக்கிறான்.

உண்ணா விரதம் இருப்பது எப்படி?
    தாகம் எடுக்கும் போது தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும்.  இயலாதவர்கள் பழரசங்கள் அருந்தலாம்.  சிறிது உடல்நிலை  தேறிய பிறகு சாறுள்ள பழங்கள் (திராட்சை, சாத்துக்குடி, மாதுளை, தர்பூசணி, ஆரஞ்சு) போன்ற பழங்களையும் பிறகு சதையுள்ள (ஆப்பிள்,  பப்பாளி) முதலிய பழங்களையும் உண்ணலாம்.  உடல் நிலை சீரான பிறகு கொட்டை பருப்புகள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  உண்ணவிரதம்  இருக்கும் போது ஓய்வெடுப்பது அவசியம்.  காற்றோட்டமுள்ள இடங்களில் ஓய்வெடுப்பது நல்லது.  நம் ஆற்றலை உறிஞ்சும் வேலைகளான டிவி  பார்ப்பது, அதிகம் பேசுவது, இசை கேட்பது, அதிக தொலைவு நடப்பது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.  நம் உடலுக்கு அது தன்னை  தானே சீர்படுத்தி கொள்ள தேவையான ஆற்றலை நாம் ஓய்வெடுத்து அளிக்க வேண்டும்.  உண்ண விரதம் இருப்பதால் நம் உடலின் நச்சுத்தன் மை குறைகிறது.  அதனால் நோய்களும் குணமடைகிறது.


        ஜீரண சக்தியை அதிகரிக்க

    ஜீரண சக்தி குறைபாடுள்ளவர்கள் தினமும் 2 ஸ்பூன் இஞ்சி சாறு அருந்தலாம்.  ஜுஸ் எடுத்து ஒரு சிறு கிண்ணத்திச் வைத்து  சிறிது நேரம் (15 நிமிடம்) கழித்து அதை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.  (அடியில் வெள்ளை நிறத்தில் இருக்கும் பொருளை உண்ணக்கூடாது)  ஒரு ஸ்பூன் தேனுடன் அருந்த வேண்டும்.  அல்சர் நோயளிகளுக்கு இது தேவையில்லை.  அவர்கள் ஜீரகத்தை மெல்லலாம்.  மேலும் ஜீரகம், மிளகு,  கொத்தமல்லி விதைகள் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரும் அருந்தலாம். (வெதுவெதுப்பாக).

        சிறுநீரகநோயாளிகள்தண்ணீர் அருந்தலாமா?

    சாறுள்ள பழங்களை மட்டுமே உண்டு வந்தால் சிறுநீரக நோயாளிகள் தாக உணர்வு தோன்றும் போது தண்ணீர் அருந்தலாம்.   சாறுள்ள பழங்களை மட்டுமே உண்பதால் தாக உணர்வும் கம்மியாகவே இருக்கும்.  கிட்னி பாயிண்டில் கைகளிலும், கால்களிலும் அக்குபிரஷர் அ ழுத்தம் கொடுக்கலாம்.  சர்க்கரையும், உப்பும் அறவே சேர்க்கக்கூடாது. 

    சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் நிறைய தண்ணீர் கல் கரையும் வரை அருந்திக் கொண்டே இருக்க வேண்டும். உடலில் உள்ள  கால்சியத்தை கிரகித்துக் கொள்ளூம் தன்மை குறைவாக இருப்பதாலும் பால், பால் பொருட்களை அதிகமாக உண்பதாலுமே கற்கள் உண்டாகிறது.   இதற்கு அக்கு பிரஷரில் தைராய்டு மற்றும் கிட்னி பாயிண்டில் அழுத்தம் கொடுத்தால் விரைவில் குணம் அடையலாம்.  (மேலும் விவரங்களுக்கு நம்  நலம் நம் கையில் பாகம்1 & தேவேந்திர வோரா).  வாழைத்தண்டு ஜுஸ் சிறுநீரக கற்களை கரைக்க உதவும்.  பழரசங்களை மட்டுமே அருந்தி வந் தால் விரைவில் குணம் கிடைக்கும்.

    மண்பானையிலும், ஈயம் பூசப்படாத செம்பு பாத்திரத்திலும் வைக்கப்பட்டுள்ள நீரை அருந்துவது நல்லது. துளசி இலைகளை த ண்ணிரில் போட்டும் அருந்தலாம்.

        எவ்வளவு தண்ணீர் அருந்தலாம்?

    இயற்கை உணவு உட்கொள்பவர்களூக்கு தண்ணீர் அருந்த அளவு பார்க்க வேண்டியதில்லை.  தாக உணர்வு தோன்றுபோதெல் லாம் தண்ணீர் அருந்தலாம்.  உடலை தூய்மைபடுத்த தினமும் 3-&-5 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பது சமையலுணவில் இருப்பவர்களுக்கே  பொருந்தும்.

இயற்கை உணவுக்கு மாறமனக்கட்டுப்பாடு பெறுவது எப்படி?
(1) அக்கு பிரஷர் செய்யவும்.  நாளமில்லா சுரபிகளிலும், பலவீனமான உறுப்புகளுக்குரிய பாயிண்டுகளிலும் அழுத்தம் கொடுக்கவும்.  நாளமில்லா  சுரபிகளில் கொடுக்கப்படும் அழுத்தம் எளிதில் மனஉறுதி பெற உதவும்.
(2) தியானம்.
(3) இயற்கை உணவு குறித்து தினமும் 2 பக்கங்களாவது படிக்கவும்.
(4) இயற்கை உணவு உட்கொள்பவர்களோடு தொடர்பு வைத்திருக்கவும்.

            மனரீதியாக தயாராதல்

    பள்ளிக்கு குழந்தைகள் செல்ல தயாராவது போல ஒருவர் இயற்கை உணவு உண்ண ஆரம்பிக்கும் முன்னர் மனரீதியாக தயாராக  வேண்டும்.  இந்த கட்டுரை இயற்கை உணவு பற்றி புரிந்து கொள்ள ஓரளவு உதவியாக இருக்கும்.  ஆர்வமுள்ளவர்கள் வலைதளம் மற்றும் புத் தகங்கள் மூலம் மேலும் இயற்கை உணவு பற்றி தெரிந்து கொள்ளலாம்.  மேலும் மேலும் இயற்கை உணவு பற்றி தெரிய தெரிய அவரால் தன்  உடலில் இயற்கை உணவு உண்ண ஆரம்பித்த பின் ஏற்படும் நுட்பமான மாற்றங்களை கவனிக்க முடியும்.  கழிவுகள் வெளியேற்றத்தை கண்டு  அஞ்சமாட்டார்கள்.  எனவே நோயிலிருந்து குணமடைய இயற்கை உணவு உண்பவர்கள் இயற்கை உணவு குறித்து நன்றாக புரிந்து கொண்டு  மனரீதியாகவும் தயாராக வேண்டும்.  நோயாளிகளின் ஒத்துழைப்பு குணமடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    இயற்கை உணவு உட்கொள்பவர் எப்போதும் நேர்மறை எண்ணங்களையே மனதில் வைத்திருக்க வேண்டும்.  ’நான் குணமடைய  போகிறேன்’, ’நான் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறேன்’போன்றஎண்ணங்களை மனதில் நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.  இயற்கை  உணவு உண்பது குறித்து கேலி, கிண்டல் செய்வோரை விட்டு விலகி இருக்கவும்.  நன்றாக சிரிக்கவும்.  நன்றாக சிரிப்பவர்கள் எளிதில்  நோய்வாய்ப்படுவதில்லை.

            சிரிப்பும் ஆரோக்கியமும்

(1) புன்னகை இருக்க பொன்னகை எதற்கு?
(2) வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும், சிரிச்சா என்ன செலவா ஆகும்?
(3) சிரிப்பு ஒரு சிறந்த மருந்து.
(4) மனிதன் மட்டுமே சிரிக்க, சிந்திக்கக்கூடிய உயிரினமாகும்.
(5) சிரிப்பவர்களின் ஆயுள் அதிகம்
(6) சிரிப்பது முகத்திற்கு ஒரு நல்ல பயிற்சியாகும்.
(7) ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

இயற்கைஉணவு குறித்த பொன்மொழிகள்
(1) வைகறையில் துயில் எழு. (அதிகாலையில் எழ வேண்டும்).
(2) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
(3) உண்பதற்காக வாழாதே. வாழ்வதற்காக உண்.
(4) நீரை உண்; உணவை குடி(உணவை நன்கு மென்று கூழ் போலாக்கி குடிக்க வேண்டும்.  நீரை சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலந்து பருக  வேண்டும்)
(5) உணவும் மருந்தும் ஒன்றே.
(6) அஜீரணமும், மலச்சிக்கலும் ஆதிநோய்கள் பின்னால் வருபவை மீதி நோய்கள்.
(7) கடவுள் கனிகளை படைத்தார்.  சாத்தான் சமையலை படைத்தான். 
(8) படுக்கை காப்பி படுக்கையில் தள்ளும்.
(9) பசிக்காக சாப்பிடு; ருசிக்காக சாப்பிடாதே
(10) சர்க்கரையும் உப்பும் விஷங்களாகும்.
(11) சுத்தமான காற்று 100 அவுன்ஸ் மருந்துக்கு சமமாகும்.& ஜப்பானிய பொன்மொழி
(12) சூரியன் இல்லாத இடத்திற்கு வைத்தியர் வருகிறார்.&ஸ்பெயின் பொன்மொழி
(13) 5 மணிக்கு எழு 9 மணிக்கு உண் (காலை)
    5 மணிக்கு உண் 9 மணிக்கு உறங்கு(மாலை)
(14) வயிறு பெரிதாக உள்ள இடத்தில் மூளை சிறியதாக இருக்கும்&ஜெர்மன் பழமொழி.
(15) பெருந்தீனியே பஞ்சத்தையும் போரையும் விட அதிக மக்களை கொல்கிறது.
(16) சூரிய உதயத்திற்கு பின்பும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பும் உட்கொள்ளூம் உணவு ஆயுளை அதிகரிக்கிறது.

        இயற்கை குளிர் சாதனப்பெட்டி

    பழங்களை புதிதாக இருக்கும் போதே சாப்பிட்டு விட வேண்டும்.  குளிர் சாதனப் பெட்டியில் வைத்து உபயோகப்படுத்துவது ந ல்லது அல்ல.  பழங்களை ஓரிரு நாட்கள் குளிர் சாதனப் பெட்டியில் வைக்காமல் ஒரு எளிய முறையில் வாடாமல் வைக்கலாம்.  ஒரு அகலமான  பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.(அளவு தேவைக்கேற்ப)   அதை மணலில் நிரப்பிக் கொள்ளவும்.  அதில் சிறிது நீர் தெளித்து மண்ணை  ஈரமாக்கவும்.  ஒரு மெல்லிய பருத்தி துணியை மணல் மேல் விரிக்கவும்.  இதற்கு மேல் காய்கறிகளையும் பழங்களையும் வைக்கவும். இது ஓரளவுக்கு  பழங்களை புதிதாக வைத்திருக்க உதவும்.  தண்ணீர் அவ்வப்போது மணல் மீது தெளித்து மணலை ஈரமாக வைத்துருக்கவும்.  கீரைகள், க ருவேப்பிலை, கொத்தமல்லியை அதன் தண்டு நீரில் மூழ்குமாறு வைத்தால் 1 நாளைக்கு வாடாமல் இருக்கும்.  தேவையிருக்கும் பொழுது வாங்கி  உடனே உபயோகிப்பது நல்லது.  வீடுகளில் இடவசதி இருப்போர் பழமரங்கள் நட்டு வளர்க்கலாம்.  அலங்கார செடிகள் வளர்ப்பதற்கு
பதிலாக கீரைகள், காய்கறிகளை தொட்டியில் வளர்க்கலாம்.  மொட்டை மாடியில் தோட்டம் போட்டு புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை  போன்றவற்றை வளர்க்கலாம்.

        ஏ.சி.வரமா? சாபமா?

    ஏ.சி. ஒரு மிகப் பெரிய சாபமாகும்.  அது தேவையேயில்லை. நம் முன்னோர்கள் சமைத்த உணவு உண்டாலும் அவர்கள் நன்றாக  வெயிலில் வேலை செய்ததால் வியர்வை நன்றாக வெளியேறியது.  சுத்தமான காற்றும் அவர்களுக்கு கிடைத்தது.  எனவே அவர்கள் நோயில் லாமல் வாழ்ந்தார்கள்.  நாம் நீராவிக் குளியல், வாழையிலைக் குளியல் போன்றவற்றை வியர்வை நன்கு வெளியேற எடுக்கிறோம்.  ஆனால் ஏ.சி.  வியர்க்க விடுவதில்லை.  இதனால் நாம் தற்காலிகமாக சுகமாக உணர்கிறோம்.  ஆனால் இது மிகவும் கெடுதலானது.  எனவே நாம் நம்  அறைகளில் ஏ.சி. இல்லாமல் இருக்க முயற்சிப்பது நல்லது.  இயற்கைக்கு எதிராக இருக்கும் எதுவும் நமக்கு தேவையில்லை.  மேலும் நாம்  தொடர்ந்து இயற்கை உணவு உட்கொண்டு வந்தால் நம் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறிவிடும்.  பிறகு ஏ.சி., பேன் போன்றவை இல் லாமலேயே நாம் ஏ.சி. யில் இருப்பதை போல உணரலாம்.  ஏ.சி. மற்றும் குளிர் சாதனபெட்டியில் உபயோகப்படுத்தப்படும் இரசாயனங்கள்  ஓசோன் படலத்தில் ஓட்டை விழச் செய்கின்றன.  இந்த ஓசோன் படலமே நம்மை சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களில் இருந்து (அ ல்ட்ரா வயலட் ரேஸ்) காக்கின்றன என்பதை நாம் சிறிது எண்ணிப் பார்க்க வேண்டும்.


        இயற்கை உணவு உண்ண ஆரம்பித்த பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள்

(1) உயரத்திற்கேற்ற எடை தானாகவே வந்து விடும். 
களைப்பில்லாமல் நீண்ட நேரம் வேலை செய்ய உடலுக்கு தெம்பு கிடைக்கும்.
(2) தோல் மிருதுவாகவும், இலாஸ்டிக் தன்மையுடனும் சுருக்கமில்லாமலும் இருக்கும்.  மற்ற முறைகள் ( உடற்பயிற்சி, ஜிம், உணவுக் கட்டுப்பாடு,ம ருந்து மாத்திரை மூலம் எடை குறைப்பது போல் இந்த முறையில் தோலில் சுருக்கங்கள் விழாது.
(3) கூந்தல் மென்மையாக இருக்கும்.
(4) அழகு க்ரீம்கள், ஷாம்பூ, எண்ணெய் போன்றவை தேவையிருக்காது.  தேவைப்பட்டால் ஏதாவது தானிய மாவு (பாசிப் பயிறு, கடலை மாவு)  போன்றவற்றை ஷாம்பூவுக்கு பதிலாக உபயோகிக்கலாம்.  வெந்தயத்தை 8 மணிநேரம் ஊற வைத்து அரைத்து ஷாம்பூவாக உபயோகிக்கலாம்.   கூந்தல் மென்மையாவதுடன் உடலும் குளிர்ச்சியாக இருக்கும்.
சோற்று கற்றாழையை தோலை மிருதுவாக்கவும், கூந்தலுக்கு ஷாம்பூவாகவும் உபயோகிக்கலாம்.  கூந்தல் மென்மையாவதுடன் உடலும் கு ளிர்ச்சியாக இருக்கும். உள்ளிருக்கும் ஙுங்கு போன்ற பகுதியை நீரில் அலசி விட்டு உண்ணலாம்.  அது பெண்களுக்கு மாதவிடாய் தொந்தரவு களுக்கும், வெள்ளை படுதலுக்கும் ஒரு அரிய மருந்தாகும்.  இதை மிகவும் எளிதாக தோட்டங்களிலும், தொட்லிகளிலும் வளர்க்கலாம்.  மிகக் கு றைந்த அளவு தண்ணீரே போதுமானது.
(5) கண்கள் தெளிவாகவும் ஒளி விடக் கூடியதாகவும் மாறும்.
(6) நாக்கு வெள்ளை படலம் இல்லாமல் சுத்தமாக இருக்கும்.
(7) உடல் இறகு போல இலேசாக இருக்கும்.
(8) உடல் நம்மை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும்.  நாம் உடலை தூக்க வேண்டியதில்லை.
(9) நகங்கள் உடைவது நிற்கும்.  நகங்களில் வெள்ளை கோடுகள் விழாது.
(10) பற்கள் தற்போது உள்ளதை விட பலமடையும். ஈறுகளில் இரத்தம் வடியாது.
(11) பொடுகு மறைந்து விடும்.
(12) நல்ல இரத்த ஓட்டத்தினால் ஈறுகள் கருப்பு நிறத்தில் இருந்து இள சிகப்பு நிறத்திற்கு மாறும்.
(13) கருவளையங்கள் மறையும்.
(14) புத்தி கூர்மையடையும்.
(15) மூச்சு சீராகவும் ஆழமாகவும் இருக்கும். மூச்சு இரைக்காது.
(16) இளமையாக் காட்சியளிக்கலாம்.
(17) புண்களில் சீழ் பிடிக்காது.  வலியிருக்காது.  விரைவில் இரத்தம் உறைந்து விடுவதால் இரத்த இழப்பு இருக்காது.
(18) குரல் இனிமையாகவும் மென்மையாகவும் மாறும்.
(19) உடலின் உள், வெளி உறுப்புகள் அனைத்தும் ஆற்றலுடையதாக மாறும்.
(20) அடர் கருப்பு நிறத் தோல் செந்நிற கருப்பாக மாறும்.

        சில இயற்கை உணவு குறிப்புகள்
(1) இயற்கை பால்: தேங்காய் பால்.  வெல்லம், கருப்பட்டி, தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
(2) கேரட் ஜுஸ்: தேங்காய்+கேரட்+இஞ்சி(சிறிய துண்டு)
(3) இயற்கை சாக்லேட் பால்: தேங்காய்+பேரிச்சை மிக்ஸியின் உதவியுடன் இவைகளை வீட்டிலேயே எடுத்துக் கொள்ளலாம்.  டின்னில்  அடைக்கப்பட்ட பழரசங்கள் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும்.
(4) காய்கறி சாலட்: உப்பு குறைவாக+மிளகு பொடி+ எலுமிச்சை துளிகள். ஜீரகத்தூள், மல்லித்தூள் சுவைக்கு சேர்த்துக் கொள்ளலாம்.
(5)பழ சாலட்: பழத்துண்டுகள்+தேன்
(6) பழம்+பேரிச்சை அரைத்து லட்டு போல பிடித்து அதற்கு மேல் முந்திரி+உலர் திராட்சை அழகுக்கு வைத்து குழந்தைகளுக்கு சத்துள்ள ஆகாரமாக  கொடுக்கலாம்.
(7) பழரசம் & பழத்துண்டுகள் மிதக்க விட்டு கொடுக்கலாம்.

        நமது குடும்பத் தேவைகளுக்கேற்பவும் கிடைக்கும்

பழங்கள், கொட்டைபருப்புகள், காய்கறிகளுக்கேற்பவும் நாமே பல வித உணவுகளை உருவாக்கலாம். உணவு தயாரித்த உடனேயே உண்டு விட  வேண்டும்.  தாமதிக்காமல் உண்ணுவது நல்லது.

        இயற்கை உணவு & சுருக்கமாக

உட்கொள்ள வேண்டிய உணவுகள்: தேங்காய், கொட்டை பருப்புகள் (முந்திரி, பாதாம், பிஸ்தா & வறுக்காதது), பேரிச்சை, வாழைப்பழம், சீசனுக்கு  கிடைக்கும் எல்லா பழங்களும், பச்சை காய்கறிகள், முளை கட்டிய தானியங்கள்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்: அசைவ உணவு, முட்டை, பால், தயிர், வெண்ணெய், நெய், மோர், பாலாடை, பனீர்(பால், பால் பொருட்கள்)
சமையலுணவில் குறைக்க வேண்டியவை மற்றும் அதற்கு மாற்று உணவு:

தவிர்க்க வேண்டியது        மாற்று உணவு
                       
(1) சர்க்கரை                             வெல்லம், கரும்பு சர்க்கரை,
                                                       கருப்பட்டி
(2) பொடி உப்பு                        கல் உப்பு
(3) கரையாத கொழுப்பு      கரையும் கொழுப்பு
கொண்ட எண்ணெய்          கொண்ட எண்ணெய்
(4) மிளகாய்                              மிளகு
(5) புளி                                         எலுமிச்சை
(6) கடுகு                                     சீரகம்
(7) காபி, டீ                                 லெமன் டீ, ப்ளாக் டீ, சுக்கு காபி, வரக் காப்பி
(8) பாலிஷ் செய்த அரிசி   அவல், சிகப்பரிசி

    இந்த மாற்று உணவு (மிளகு, எலுமிச்சை, சீரகம், தவிர) சமைத்த உணவை தவிர்க்க முடியாதவர்களுக்கு மட்டும்.  இவை இயற்கை  உணவுகள் அல்ல.  அவை தீமைகள் குறைவாக செய்யும்.
    முதலில் 1 வேளை ஆரம்பிக்கவும்.  இரவு உணவாக ஆரம்பிப்பது நல்லது. (உடலுக்கு இயற்கை உணவை ஜீரணிக்க குறைந்த  நேரமே போதும்.  எனவே நமது தூக்க நேரத்தில் மீதியில் உடல் கழிவுகளை வெளியேற்றும்.)  ஜீரணக் கோளாறுகளும் குறையும்.  முடியாதவர்கள்  காலை உணவாக ஆரம்பிக்கலாம்.  அளவு, கலோரி கணக்குகள் கிடையாது. பசி உணர்வு தோன்றுபோதெல்லாம் வயிறு நிறைய சாப்பிடலாம்.   தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் அருந்தலாம்.  கூறப்பட்டிருக்கும் இயற்கை சிகிச்சை முறைகள் கழிவுகளை பக்கவிளைவுகள் இல்லாமல்  வெளியேற்றும்.


        இயற்கை உணவு&உலக பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒரே தீர்வு

(1) பழங்களை துணிப்பையிலேயே வாங்கிச் செல்லலாம். பிளாஸ்டிக்  பைகளை உபயோகிக்க தேவையில்லை.  பதப்படுத்தப்பட்ட பாக்கெட்டில்  அடைக்கப்பட்ட உணவு பண்டங்களின் தேவை இருக்காது.  தேவை இல்லாவிட்டால் பிளாஸ்டிக் உற்பத்தி தானாகவே நின்று விடும்.
(2) கெட்டப் பழக்கங்கள் மறைந்து விடும்.
(3) அஹிம்சை தழைக்கும்.
(4) அமைதி நிலைக்கும்.
(5) ஜாதி, மத, இன, மொழி, நிற, தேச வித்தியாசங்கள் மறைந்து விடும்.
(6) ஒற்றுமை ஓங்கும்.
(7) மக்கள் தொகை பெருக்கம் இருக்காது.
(8) மூட பழக்க வழக்கங்கள் இருக்காது.
(9) பெண்கள் சமையலில் இருந்து விடுதலை பெறுவர்.
(10) கணவன் & மனைவி ஒற்றுமையாக இருப்பார்கள்.  அதனால் விவாகரத்துக்கள் குறைந்து விடும்.
(11) எரி பொருள் (எரி வாயு, விறகு) தேவை இருக்காது.  எனவே நாம் எரிவாயு இறக்குமதி செய்யத் தேவையில்லை.  அந்நிய செலாவணி  மிச்சமாகும்.  விறகிற்காக காடுகளை அழிக்கவும் தேவையில்லை.
கரியமில வாயு காற்றில் சமையல் மூலமாக கலப்பதை தடுக்கலாம்.
(12) பொருளாதாரம் முன்னேறும்.
(13) பஞ்சம் இருக்காது.
(14) தீ விபத்துக்கள் இருக்காது.
(15) வயல்வெளிகள் கனிகள் தரும் சோலைகளாக மாறிவிடும்.
(16) சோலைகளின் மூலமாக போதுமான மழையும் நிலத்தடி நீரும் இருக்கும்.
(17) மரங்களின் காய்ந்த சருகே அந்த மரங்களுக்கு இயற்கை உரமாகி விடும்.(செயற்கை உரங்களூம் பூச்சி கொல்லி மருந்துகளுக்கும் தேவையி ருக்காது).
(18) மண் அரிப்பு மரங்களின் வேர்கள் மூலமாக தடுக்கப்பட்டு விடும்.
(19) மரங்களின் நிழல்கள் மூலமாக புவி வெப்பமடைதல் ’க்ளோபல் வார்மிங்’ தடுக்கப்பட்டு விடும்.
(20) மரங்களின் மூலமாக தூய காற்று கிடைக்கும்.
(21) குற்றங்கள் மறைந்து விடும்.
(22) உணவு கலப்படம் செய்ய முடியாது.
(23) உணவுப் பதுக்கல், கள்ள மார்க்கெட்டில் விற்பது இயலாது.  இயற்கை உணவு அழுகும் தன்மை உடையதால் பதுக்கல் செய்ய இயலாது.   மார்க்கெட்டில் தேவை உள்ளதே உற்பத்தி செய்யப்படும். 
(24) பிரச்சனைகள் இல்லாத உலகம் உருவாகும்.
(25) ஓருலகம், ஒரு இனம், ஒரு கூட்டாட்சி உருவாகும்.


        பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்
            ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
            தொட்டி பழக்கம் சுடுகாடு வரை   

பழக்கங்கள் உருவான பிறகு அதை விடுவது மிகவும் கடினம்.  சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இளவயதில் அவர்கள் விருப்பியதை எல்லாம்  வாங்கித் தருவார்கள்.  நடுத்தர வயது வந்த பிறகு அவர்கள் கட்டுப்பாடாக இருந்துக் கொள்ளட்டும் என்று கூறுவார்கள்.  இது ஒரு பெரிய  தவறாகும்.  இதனால் குழந்தைகள் ருசிக்கு அடிமையாகிறார்கள்.  அளவுக்கதிகமான உணவை குழந்தைகளுக்கு திணிக்காதீர்கள்.  அது மூளையின்  திறனை பாதிக்கும்.  அவர்கள் குழந்தைகளுக்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு கெடுதல் செய்கிறார்கள்.  கொஞ்சமாக கொடுத்தாலும்  சத்துள்ளதாக கொடுங்கள்.  நமது அன்பை உணவை திணித்து காட்ட வேண்டியதில்லை.  அவர்கள் உணவை மறுத்தால் பட்டினியாக இருக்கட் டும்.  ஒரு வேளை உணவு உண்ணாவிட்டால் பெரிய தவறேதும் இல்லை. நன்மையே.  நன்கு பசியான பிறகு அவர்கள் தானாக சாப்பிடுவார்கள்.   குழந்தைகள் ஒல்லியாக இருந்தாலும் பரவாயில்லை.  சுறுசுறுப்பாக இருக்கிறார்களா என்று தான் பார்க்க வேண்டும்.  புதிதாக திருமணம்  ஆனவர்களும் கர்ப்பிணி பெண்களும் தங்கள் உணவில் அதிகமாக பழங்களை சேர்த்துக் கொண்டு உடல், மன அளவில் ஆரோக்கியமான குழந் தைகளை பெறலாம்.  பெற்றோர்களும், ஆசிரியர்களூம் இந்த செய்தியினை ஆசிரியர்களுக்கு எடுத்து செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.  கு ழந்தைகள் பெற்றோர்களை விட ஆசிரியர்களிடமே அதிக நேரம் செலவழிக்கிறார்கள்.  எனவே அவர்கள் இயற்கை உணவு குறித்தும் அதன் நன் மைகள் குறித்தும் குழந்தைகளுக்கு புத்தகங்கள், கதைகள், பொம்மலாட்டம், விளையாட்டுகள், படக்காட்சிகள் மூலம் விளக்கலாம். நோயில்லா  ஆரோக்கியமான உலகம் வருங்காலத்தில் மலரும்.

        இக்கட்டுரையை வாசித்தவர்களுக்கு

    மேற்கூறியவை சிலருக்கு நடைமுறைக்கு சாத்தியப்படாது என்று தோன்றலாம்.  ஆனால் தனி மனித மாற்றமின்றி சமுதாயத்தில்  எந்த மாற்றமும் ஏற்படாது.  இது வரை அதற்கு மேற்கொள்ளப்பட்ட அத்தனை முயற்சிகளும் தோல்வியையே தழுவியுள்ளன.  சிறு துளி பெரு  வெள்ளம்.  எனவே சமுதாய மாற்றத்திற்கு இயற்கை உணவு, அக்குபிரஷர், தியானம் மட்டுமே உதவும்.  சமுதாயத்தில் உள்ள அத்தனை  தீமைகளுக்கும் சமைத்த உணவே காரணம்.  ஒரு தீமையை ஒழிக்க நாம் அது உருவாகும் ஆணி வேரை அழிக்க வேண்டும்.  மேலெழுந்த வாரியான  தீர்வுகள் ஒரு போதும் பயன் தராது.  மதர் தெரஸா அமைதி இல்லத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்று கூறுகிறார்.  பழங்களே பலனை த ரும்.

    இயற்கை உணவு குறித்த தங்கள் சந்தேகங்களை e-mail: lram12062000@gmail.com என்ற முகவரிக்கு  அனுப்பலாம்.

        மனிதன் & பிரபஞ்சத்தின் மிக சிறந்த கோமாளி
மனிதனின் அடிப்படை தேவைகள்&உணவு, உடை, இருப்பிடம்
(1) உணவு: பழங்களூம் கொட்டைபருப்புகளும்
(2) உடை: உண்பது நாழி, உடுப்பது இரண்டே.
    எனவே 2 உடைகள் போதுமானது.  பருத்தி செடியில் இருந்து அதற்கு தேவையான பஞ்சை பெற்றுக் கொள்ளலாம். அதை  இராட்டையின் மூலம் உடையாக்கிக் கொள்ளலாம்.  பெரிய பெரிய ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு தேவையிருக்காது.  துணிகளுக்கு  சாயம் ஏற்றுவதால் ஆறுகள் மாசுபடுவதை தவிர்க்கலாம்.
(3) இருப்பிடம்: சிறு சிறு மண் வீடுகளும், பனை, தென்னை ஓலைகள் வேய்ந்த குடிசைகளுமே போதுமானது.  (பூகம்பங்கள் பெரிய கட்டிடங்கள்  மற்றும் பெரிய அணைகளாலேயே உருவாகிறது.  மனிதன் பூகம்பத்தை விட பூகம்பத்தினால் ஏற்படும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியே இறக்கிறான்.

    மேற்கண்ட மூன்றுக்கும் நாம் இயற்கையை மாசு படுத்த வேண்டியதில்லை.  இயற்கை சுழற்சி சமநிலையில் இருக்கும்.  விஷங்களை  கக்கும் தொழிற்சாலைகள் தேவையில்லை.  இவையே மனிதனின் தேவைக்கானவை.  மற்றவை மனிதனின் பேராசைக்கானவை.  நமது  பேராசையே நம்மை ஆயுதங்கள், பஞ்சம், வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம், சூறாவளி மூலமாக நம்மை அழிக்கிறது. 

    ஆவதும் அவனாலே(டெஸ்ட்யுப், க்ளோனிங்)

    அழிவதும் அவனாலே(ஆயுதங்கள்) என்ற நிலைக்கு வந்து விட்டான்.  அவன் ஒரே சமயத்தில் முட்டாளாகவும் அறிவாளியாகவும்  இருந்து வருகிறான்.  எனவே நமக்கு நாமே பிரபஞ்சத்தின் மிகச் சிறந்த கோமாளி& மனிதன் என பட்டம் சூட்டிக் கொள்ளலாம்.  வேறு எந்த  உயிரினமும் நம்மோடு இந்த விஷயத்தில் போட்டி போட முடியாது.

    இந்த உலகத்தின் கடைசி மரம் வெட்டப்படும் முன் பணத்தை சாப்பிட, சுவாசிக்க முடியாது என்பதை மனிதன் உணருவானா?